தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலகப் பதிவேடுகள். இ-சேவை மையச் செயல்பாடு, ஆதார் மைய செயல்பாடு, பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பொதுமக்களின் மனுக்கள் மற்றும் பட்டா, சாதிச் சான்றிதழ் போன்ற வருவாய்த் துறை சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டு, மேலும் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் விவரங்கள் குறித்தும், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் மற்றும் வருவாய் கிராமங்கள் வாரியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலரிடம் கேட்டறிந்தார்கள்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.மேலும். அலுவலக வளாகத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம். அரூர் ஊராட்சி ஒன்றியம். செட்ரப்பட்டியில் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் விபரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். மேலும் இப்பணியினை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின்போது, அரூர் வட்டாட்சியர் திரு.பெருமாள், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சி.கலைச்செல்வி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்
