Ticker

6/recent/ticker-posts

Ad Code

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலகத்தில் திடீர் ஆய்வு

 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலகத்தில் திடீர் ஆய்வு

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.01.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டார்கள்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த அலுவலகக் கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் சரியான முறையில் செயல்படுவதை உறுதிப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட உள்ள சமையல் பாத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பாத்திரங்களின் தரம் மற்றும் உறுதிதன்மை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.இந்த ஆய்வின்போது, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.சத்யா, திரு.ஜெகதீசன் உள்ளிட்ட தொடர்புடைய உடனிருந்தனர்.